TATA IPL 2023 | Captains of CSK & GT Team (Photo Credit: Twitter)

மார்ச் 31, அகமதாபாத் (Cricket News): 16 வது டாடா ஐ.பி.எல் சீசன் (TATA IPL 2023) தொடர் இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி (Narendra Modi Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து கோலாகலமாக தொடங்கியது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.பி.எல் (IPL 2023) போட்டிகள் கொண்டாட்டங்கள் கொண்ட கலைநிகழ்ச்சிகளுக்கு நடுவே ஆரம்பிக்கப்பட்டது. ஐ.பி.எல் 2023 தொடரின் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - சென்னை சூப்பர்கிங்ஸ் (Gujarat Titans Vs Chennai Super Kings) அணியும் மோதின.

CSK Bating Score: இந்திய நேரப்படி இரவு 07:30 மணியளவில் தொடங்கிய போட்டியில், டாஸை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் முதலில் களமிறங்கிய கான்வே 6 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து போல்ட் அவுட்டானார். IPL 2023: ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கலைகட்டப்போகும் ஐ.பி.எல் போட்டிகளில் என்ன சந்தேகம்?.. முழு விபரங்கள் உங்களுக்காக இதோ..!

IPL 2023 CSK Vs GT | Visuals During Chennai Super Kings Bowling (Photo Credit: @IPL)

ருத்ராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட்டானார். மொயீன் அலி 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் 6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து அவுட்டானார். அம்பட்டி ராயிடு 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து போல்ட் அவுட்டானார். சிவம் டியூப் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜடேஜா 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய தோனி 7 பந்துகளில் 14 ரன்களும், மிச்சேல் 3 பந்துகளில் 1 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். போட்டியின் இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தன. இதனால் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. குஜராத் டைட்டன்ஸின் பந்துவீச்சை பொறுத்தமட்டில் முகம்மது சமி, ரஷீத் கான், அல்சாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். Vijay Yesudas: பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸின் வீட்டில் 60 சவரன் நகைகள் திருட்டு.. காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார்.!!

GT Bating Score: குஜராத் டைட்டன்ஸ் அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய 16 பந்துகளில் 25 ரன்கள் அடித்து கேட்ச் அவுட்டானார். சாய் சுதர்சன் 17 பந்துகளில் 22 ரன்கள் அடித்து கேட்ச் அவுட்டானார். ஹர்டிக் பாண்டியா 11 பந்துகளில் 8 ரன்கள் அடித்து போல்ட் அவுட்டானார். இதனால் 15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டை இழந்து 138 ரன்கள் எடுத்திருந்தது. எஞ்சிய 5 ஓவர்களில் குஜராத் அணி இலக்கை எட்டுமா? பந்துவீச்சில் சென்னை அணி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் ஏற்பட தொடங்கியது.

IPL 2023 | CSK Vs GT Team Captains During Toss Process (Photo Credit: @IPL)

அதனைத்தொடர்ந்து, விளையாடிய விஜய் சங்கர் மற்றும் ராகுல் த்ரிவேதியா ஜோடி நின்று ஆடியது. இதனால் அணி வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லப்பட்டது. ஆனால், விஜய் சங்கர் 21 பந்துகளில் 27 ரன்களை அடித்து கேட்ச் அவுட்டாகினார். இதனால் ராகுல் - ரிஷத் கான் இறுதி 2 ஓவரில் சென்னை அணியின் பந்துவீச்சுகளை எதிர்கொண்டன. இறுதியில் ரிஷத் கான் அதிரடி ஆட்டம் பார்வையாளர்களின் பல்சை அதிரவைத்தது.

19 வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி 171 ரன்கள் எடுத்திருந்தது. எஞ்சிய 6 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. இறுதி ஓவரில் நின்று ஆடிய ரிஷத் கான் 3 பந்துகளில் 10 ரன்கள் அடித்ததை தொடர்ந்து அணி வெற்றி அடைந்தது. ராகுல் 15 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் 19.2 ஓவரில் 182 ரன்கள் எடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் சீசனில் முதல் வெற்றி அடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் பந்துவீசிய ராஜ் வரதன் 4 ஓவரில் 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்திருந்தார்.