CSK Team Deepak Chahar Celebrate Victory (Photo Credit: Twitter)

மே 30, குஜராத் (Cricket News): ஐ.பி.எல் 2023 கிரிக்கெட் இறுதி போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் நடைபெற்றது. நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்திய குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் சேர்த்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மறுமுனையில் சென்னை அணி களமிறங்கியது. 9 Years Of Seva: “வளர்ந்த இந்தியாவை உருவாக்க கடுமையாக உழைப்போம்” – பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!

அப்போது மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இறுதியில் டி.எல்.எஸ் முறைப்படி சென்னை அணி 15 ஓவரில் 175 ரன்கள் அடிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. சென்னை அணி தனது இலக்கை எட்டி சாதனை படைத்தது.

சென்னை அணியின் வெற்றியை நள்ளிரவில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தீபக் சாகர் தங்கும் விடுதியில் தனது மகிழ்ச்சியை ஆட்டம் ஆடி வெளிப்படுத்தினார்.