மே 29, அகமதாபாத் (Cricket News): டாடா ஐ.பி.எல் 2023 (TATA IPL 2023) கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் - குஜராத் டைட்டன்ஸ் (Chennai Super Kings Vs Gujarat Titans) அணிக்கும் இடையே மே 28ம் தேதியான நேற்று நடைபெறுவதாக இருந்தது.
நேற்றைய ஆட்டத்தில் இடைவிடாது மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் இன்று இறுதி போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை காண வெளிமாநிலங்களில் இருந்து அகமதாபாத் நகருக்கு சென்னை அணியின் ரசிகர்கள் வந்திருந்தார்கள்.
Mahendra Singh Dhoni in the house! 🏟️
No shortage of energy here in Ahmedabad 🔥🔥
Inching closer to LIVE action 🙌#TATAIPL | #Final | #CSKvGT | @msdhoni pic.twitter.com/HSCrTJJ14W
— IndianPremierLeague (@IPL) May 29, 2023
இவர்கள் மழைக்கு ஒதுங்க வழியில்லாமல் கிடைத்த இடங்கள், இரயில் நிலையங்களில் உறங்கி எழுந்தனர். தற்போது சென்னை அணி ரசிகர்கள் அனைவரும் இறுதி போட்டியை காண ஆவலுடன் இருக்கின்றனர்.
இதனால் குஜராத் நகரம் மற்றும் அகமதாபாத் மைதானமே மஞ்சள் படையாக மாறியுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இன்று டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதனால் குஜராத் அணி பேட்டிங் செய்ய தயாராகியுள்ளது.
#WATCH | Gujarat: Cricket fans throng Narendra Modi stadium in Ahmedabad ahead of the final IPL match between Chennai Super Kings and Gujarat Titans.
The match is being played today after getting postponed due to heavy rain, yesterday. #IPL2023Final pic.twitter.com/h45HyJoloI
— ANI (@ANI) May 29, 2023