Shubman Gill (Photo Credit: Twitter)

மே 22, பெங்களூர் (Cricket News): டாடா ஐ.பி.எல் 2023 சீஸனின் 70வது போட்டித்தொடர் நேற்று பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொண்டன.

ஆட்டத்தில் குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி சார்பில் விளையாடிய வீரர்களில் விராட் கோஹ்லி 61 பந்துகளில் 102 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். பாப் டுப்ளசிஸ் 19 பந்துகளில் 28 ரன்களும், மைக்கேல் 16 பந்துகளில் 26 ரன்களும் அடித்திருந்தனர். Thirukkural in Tok Pisin Language: டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி.!

ஆட்டத்தின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 197 ரன்கள் எடுத்தது. இதனால் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்து நின்று விளையாடிய ஷுபனம் ஹில், இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 52 பந்துகளில் 104 ரன்கள் எடுத்திருந்தார். விஜய் சங்கர் 35 பந்துகளில் 53 ரன்கள் அடித்திருந்தார்.

19.1 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு குஜராத் அணி 198 ரன்கள் குவித்து வெற்றி அடைந்தது. குஜராத் அணியின் வெற்றிக்கு ஷுபனம் கில்லின் அதிரடி ஆட்டம் பேருதவியாக இருந்தது. இந்த வெற்றியை பொறுக்க இயலாத பெங்களூர் மற்றும் விராட் கோலியின் ரசிகர்கள் என்ற பெயரில் இருந்த சமூக கணக்குகள் இருப்போர் ஷுபனம் ஹில் மற்றும் அவரின் சகோதரியின் இன்ஸ்டா கணக்குகளை பதிவிட்டு அவதூறாக அடாவடி செய்தனர். இது தற்போது சர்ச்சைக்குரிய பேசுபொருளாகியுள்ளது.