David Warner (Photo Credit: @IPL X)

மார்ச் 23, மொஹாலி (Sports News): 17வது ஐபிஎல் சீசன் (IPL 2024) தொடர், சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. சென்னை - பெங்களூரு அணிகள் மோதிக்கொண்ட நேற்றைய ஆட்டத்தின் முடிவில், சொந்த மண்ணில் சென்னை அணி (CSK Vs RCB) தனது முதல் வெற்றியை உறுதி செய்தது. இதனால் போட்டியை நேரில் கண்ட ரசிகர்கள் பலரும் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்றனர். அதனைத்தொடர்ந்து, இரண்டாவது நாளான இன்று மாலை 03:30 மணியளவில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (DC Vs PBKS) அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

தடுமாறினாலும் ரன்களை குவித்த டெல்லி அணி வீரர்கள்: போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய டெல்லி வீரர்களில் டேவிட் வார்னர் 21 பந்துகளில் 29 ரன்கள் அடித்து, காகிஸோ ரபடாவின் பந்தில் சிக்ஸர் விளாசி, பின் ஹர்ஷல் படேலின் பந்தில் கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். மிச்சேல் 12 பந்துகளில் 20 ரன்கள், சாய் ஹோப் 25 பந்துகளில் 33 ரன்கள், ரிஷப் 13 பந்துகளில் 18 ரன்கள், ரிக்கு பாய் 7 பந்துகளில் 3 ரன்கள், திரிஷ்டன் 8 பந்துகளில் 5 ரன்கள், அக்சர் 13 பந்துகளில் 21 ரன்கள், சுமித் 9 பந்துகளில் 2 ரன்கள், எடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

இறுதியில் பஞ்சாபின் பந்துகளை பறக்கவிட்ட நாயகன்: அபிஷேக் 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து இறுதிக்கட்டத்தில் மாஸ் காண்பித்து இருந்தார்.  அவர் மட்டும் 4 பவுண்டரி, 2 சிக்சர் விளாசி இருந்தார். தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், மைக்கேல், ரிஷப் ஆகியோரின் இழப்பு அணிக்கு ரன்கள் சேர்க்க இயலுமா? என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தியது. இதனால் போராடி டெல்லி அணி இறுதியில் 174 ரன்கள் குவித்தது. பந்துவீச்சை பொறுத்தமட்டில் ஹர்ஷல் & அர்ஷிதீப் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்திருந்தனர். காகிஸோ, ஹர்ப்ரீத், ராகுல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 2 விக்கெட் ரன் அவுட் ஆனது. 175 ரன்கள் பஞ்சாப் அணிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கற்பனையில் எட்டாத மாயாஜாலம் செய்த டேவிட் வார்னர்: இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் தொடக்கத்தில் களமிறங்கிய டேவிட் வார்னர், காகிஸோ ரபாடாவின் (Kagiso Rabada) பந்துகளில் சிக்ஸர் அடித்து அசத்தினார். வித்தியாசமான முறையில், நொடியில் சுதாரித்து அட்டகாசமாக அவர் பந்தை எதிர்கொண்டது வார்த்தைகளால் விவரிக்க இயலாத வகையில் இருந்தது. அந்த ஷாட் ரசிகர்களின் மூளைக்குள் மாயாஜாலம் செய்துவிட்டது. அந்த வீடியோ உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது. அவர் எப்படி அந்த சிக்சை எதிர்கொண்டார் என தெரியாமல் பார்வையாளர்கள் பலரும் விழிபிதுங்கிப்போயினர். இப்போட்டிகளை ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் நேரலையில் இலவசமாக காணலாம். தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் பார்க்கலாம்.

வார்னரை புகழ்ந்த ரசிகரின் பதிவு: