IPL 2024 | RR Vs RCB Eliminator Match (Photo Credit: @IPL X)

மே 23, அகமதாபாத் (Cricket News): ஐபிஎல் 2024 (IPL 2024) கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், நேற்று எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் (RR Vs RCB) அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சார்பில் களமிறங்கிய தொடக்க வீரர்கள் நின்று அடித்து ஆடினாலும், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணறிப்போயினர். பெங்களூர் அணியின் சார்பில் விளையாடியவர்களில் விராட் கோலி 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெளியேற, பாப் டூப்ளஸிஸ் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேமரூன் 21 பந்துகளில் 27 ரன்னும், ரஜத் படிதார் 22 பந்துகளில் 34 ரன்னும், மஹிபால் 17 பந்துகளில் 32 ரன்னும் எடுத்து இருந்தனர். ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்த பெங்களுரு அணி 172 ரன்கள் எடுத்தது. இதனால் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்ற ஆர்ஆர் அணி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் யஷஸ்வி 30 பந்துகளில் 45 ரன்னும், டாம் 15 பந்துகளில் 20 ரன்னும், சஞ்சு 13 பந்துகளில் 17 ரன்னும், ரியான் 26 பந்துகளில் 36 ரன்னும், ஷிமரோன் 14 பந்துகளில் 26 ரன்னும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். ஆட்டத்தின் முடிவில் 19வது ஓவரில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த ஆட்டத்தின் வாயிலாக இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு ராஜஸ்தான் அணி தேர்வாகி, நாளை ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றியடையும் அணி இறுதிப்போட்டியில் கொல்காத்தா அணியில் மோதும். இறுதிப்போட்டி இந்த ஆண்டு சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சை பொறுத்தமட்டில் பெங்களுரு அணி சார்பில் விளையாடிய முகம்மது சிராஜ் 2 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். ராஜஸ்தான் அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் ஆவேஷ் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் 2 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.

வெற்றியை தவறிவிட்டு ராஜஸ்தானுக்கு வாழ்த்து கூறிய பெங்களூர் அணி வீரர்கள்:

சஞ்சுவின் விக்கெட் காலி செய்யப்பட்ட காணொளி:

கோக்லருக்கு ஸ்டெம்ப் பறந்த சம்பவம்: