Matheesha Pathirana | Rohit Sharma (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 15, மும்பை (Sports News): 2024 ஐபிஎல் கிரிக்கெட் (IPL 2024) தொடரின் 29 ஆவது ஆட்டம் நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - மும்பை இந்தியன் அணியும் (CSK Vs MI) மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, சென்னை அணி முதலில் களமிறங்கியது.

சிஎஸ்கே அணி குவித்த ரன்கள் விபரம்: சென்னை அணியின் சார்பில் விளையாடியவர்களில் ருத்ராஜ் கைக்வாட் 40 பந்துகளில் 69 ரன்னும், சிவம் டியூப் 38 பந்துகளில் 66 ரன்னும் அடித்து அசத்தியிருந்தனர். இறுதி கட்டத்தில் களமிறங்கி நான்கு பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ் தோனி (MS Dhoni) மூன்று சிக்சர் மற்றும் இரண்டு ரன் என 4 பந்துகளில் 20 ரன் எடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி மைதானத்தை அதிரவைத்திருந்தார்.. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்த சென்னை அணி, 206 ரன்கள் எடுத்திருந்தது. Ram Navmi 2024: ஸ்ரீ ராம நவமி 2024 உற்சவம்.. வழிபாடு முறைகளும், விரத நன்மைகளும்.. முழு விபரம் இதோ.! 

MS Dhoni (Photo Credit: @IPL X)

எம்ஐ அணி குவித்த ரன்கள் விபரம்: மும்பை அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) இரண்டு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். ஆட்டத்தின் பிற்பாதியில் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின், தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, இறுதிவரை நின்று ஆடி சத்தம் அடித்தாலும் அணியின் வெற்றி வசமாகவில்லை. மும்பை அணியின் சார்பில் விளையாடியவர்களில் ரோஹித் சர்மா (Rohit Sharma) 63 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். திலக் வர்மா 20 பந்துகளில் 31 ரன்னும், இசான் கிஷான் 15 பந்துகளில் 23 ரன்னும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். எஞ்சிய பிற வீரர்கள் அனைவரும் சொற்பரன்களில் வெளியேறினர்.

சென்னை அணியின் அசத்தல் வெற்றி: இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்த மும்பை அணி, 186 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இலக்கை எட்ட இயலாத காரணத்தால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றிபெற்றது. தோனி இறுதியாக களமிறங்கி எடுத்த 20 ரன்கள் அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தது. சென்னை அணியின் சார்பில் பந்துவீசியவர்களின் மாதேசா பத்திரானா, தான் வீசிய நான்கு ஓவர்களில் 28 நாட்கள் மட்டும் எதிரணியை அடிக்கவிட்டு 4 விக்கெட் கைப்பற்றி அசத்தல் செயல்பாடுகளை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இன்றைய போட்டி யாருக்கு? ஐபிஎல் போட்டியின் 30-வது ஆட்டம் இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து பெங்களூர் - ஹைதராபாத் (Royal Challengers Bengaluru Vs Sun Rises Hyderabad) அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் நீங்கள் இலவசமாக நேரலையை காணலாம்.

தோனியின் அசத்தல் சிக்ஸ்:

போராடி தோற்றது மும்பை:

சதமடித்து மாஸ் சம்பவம் செய்த ரோஹித் சர்மா: