ஜூன் 14, மும்பை (Sports News): முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் இருந்து தற்போது டிஜிட்டல் உலகத்தினுள் அடியெடுத்து வைத்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் 2023 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் உரிமைகளை பெற்ற ஜியோ நிறுவனம் (Jio), தனது ஜியோ சினிமா (Jio Cinema) செயலியின் வழியே அதனை இலவசமாக காண வழிவகை செய்தது.
இதன் மூலமாக இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ஜியோ சினிமா 147 கோடி பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒளிபரப்பான ஐ.பி.எல் தொடரின் போட்டிகளை தினமும் 4 கோடிக்கும் அதிகமானோர் நேரலையில் கண்டு கழித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI) நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அங்கு இந்திய அணி விளையாடும் போட்டிகளின் டிஜிட்டல் உரிமைகளை ஜியோ சினிமா பெற்றுள்ளது. இது ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு தொடர் பின்னடைவாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது.
ஜூலை 12ம் தேதி முதல் வங்காளதேசத்தில் (IND Vs BAN) இந்தியா - வங்கதேச அணிகள் மோதிக்கொள்கின்றன. 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகள் என 10 போட்டிகளை இந்திய அணி விளையாடுகிறது. ஜூலை 12ல் தொடங்கும் விளையாட்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி நிறைவு பெறுகிறது.