
ஜூன் 09, பிரிஸ்டோல் (Sports News): சாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் (ENG Vs WI) விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, நேற்று (ஜூன் 08) நடந்த 2வது டி20 போட்டியிலும், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. CSG Vs NRK: டிஎன்பிஎல் 6வது மேட்ச்.. சேப்பாக் - நெல்லை அணிகள் இன்று மோதல்..!
ஜோஸ் பட்லர் சாதனை:
இப்போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் அடித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.3 ஓவர்களில் 197 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதில், இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர் ஜோஸ் பட்லர் 47 ரன்களை அடித்ததன் மூலம் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இங்கிலாந்து அணியின் பில் சால்ட்டின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டி20யில் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து வீரர்கள்:
- ஜோஸ் பட்லர் - 22 இன்னிங்ஸ் 658 ரன்கள்*
- பில் சால்ட் - 13 இன்னிங்ஸ் 640 ரன்கள்*
- அலெக்ஸ் ஹேல்ஸ் - 13 இன்னிங்ஸ் 423 ரன்கள்
- இயோன் மோர்கன் - 15 இன்னிங்ஸ் 258 ரன்கள்