ஜூலை 31, திண்டுக்கல் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2024) டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நேற்று இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் குவாலிபயர் 1 பிளே ஆஃப் (Qualifier 1) போட்டி நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடித்த நடப்புச் சாம்பியன் கோவை கிங்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் (LKK Vs ITT) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணிக்கு துஷார் ரஹீஜா மற்றும் அமித் ஷாத்விக் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி, முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் குவித்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தனர். ரகிஜா அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். Rohan Bopanna Retires: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார் ரோஹன் போபண்ணா.. டென்னிஸ் ரசிகர்கள் சோகம்..!
அடுத்த சில ஓவரில் மறுபுறம் 1 பவுண்டரி 7 சிக்ஸரை பறக்கவிட்ட சாத்விக் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். 20 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் குவித்து அசத்தியது. பின்னர், 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய கோவை அணிக்கு, முதல் பந்திலேயே விக்னேஷ் கோல்டன் டக் அவுட் ஆனார். ஆனால், ஒருபுறம் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடினார். இருப்பினும், கோவை அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து 53 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இந்நிலையில், சாய் சுதர்சன் மற்றும் முகிலேஷ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இருவரும் கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். சாய் சுதர்சன் 9 பவுண்டரி 9 சிக்ஸருடன் 123 ரன்களை குவித்தார். முகிலேஷ் 48 ரன்கள் அடித்தார். அதனால் 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து கோவை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் முதல் அணியாக நடப்புச் சாம்பியன் கோவை கிங்ஸ் அணி தகுதி பெற்றது. சதமடித்து வெற்றிக்கு பங்காற்றிய சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை பெற்று சென்றார்.
சரவெடி சாய்🔥💪🏽#TNPL2024 #NammaOoruAatam #NammaOoruNammaGethu pic.twitter.com/KaoUqy2rFy
— TNPL (@TNPremierLeague) July 31, 2024