84-Year-Old Woman Raped: 84 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை.. சிறுவன் கைது..!

சென்னையில் 84 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

84-Year-Old Woman Raped: 84 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை.. சிறுவன் கைது..!
Knife Murder | Women Sad Both File Pics (Photo Credit: @ItsKhan_Saba X / Pixabay)

ஜனவரி 30, சென்னை (Chennai): சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி பொன்னி (வயது 83). இவர் அதே பகுதியில், மக்கள் கொடுக்கும் உணவுகளை உண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்த, எண்ணூர் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, 18 வயது மதிக்கத்தக்கச் இளைஞர், மூதாட்டியைத் துன்புறுத்தி இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதே நேரம், நேற்று மூதாட்டியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. Siren First Song Out: சைரன் படத்தின் முதல் பாடல்.. மாஸ் காட்டும் ஜெயம் ரவி..!

இதனையடுத்து எண்ணூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த சிறுவனைப் பிடித்து விசாரித்ததில், மூதாட்டியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதை ஒப்புக் கொண்டுள்ளான். அதனைத் தொடர்ந்து சிறுவனைக் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Jan 30, 2024 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).