மார்ச் 11, புதுடெல்லி (Sports News): சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த இங்கிலாந்து-இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி 3 போட்டிகளில் இந்திய அணி வீரர் முகமது சமி விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், காயம் குணமடையாத காரணத்தால் அவர் பங்கேற்க இயலவில்லை. மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக லண்டன் சென்றிருந்தார். கணுக்கால் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், இந்தாண்டு நடைபெறும் இருபது ஓவர் உலகக்கோப்பையில் இருந்து சமி விலகியுள்ளதாக பிசிசிஐ (BCCI) தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். Drug Smuggling: நாடு கடத்தப்பட இருந்த பலகோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் – சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..!
இந்திய அணிக்கு பின்னடைவு: மேலும், செப்டம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சமி இந்திய அணியில் இணைவார் எனவும் தெரிவித்தார். ஐசிசி இருபது ஓவர் உலகக்கோப்பையில் ஜூன் 9 ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில், சமி தொடரில் இருந்து விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த ஒரு நாள் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்தவர்களின் பட்டியலில் சமி (24 விக்கெட்கள்) முதலிடம் பிடித்தார். மேலும், சமி இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.