மார்ச் 11, புதுக்கோட்டை (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகேயுள்ள இறால் பண்ணையில் போதைப்பொருட்கள் இருப்பதாக ரகசிய தகவல் ஒன்று சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவலின்படி, அதிரடியாக சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். A Worker Was Killed: மர்ம நபர்கள் குடிபோதையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி தப்பி ஓட்டம் – துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறையினர்..!

பலகோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள்: அதிகாரிகள் நடத்திய சோதனையில் 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருட்களையும் மற்றும் 874 கிலோ எடைகொண்ட கஞ்சா பொருட்களையும் கைப்பற்றினர். ரூ. 110 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை அதில் அடங்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்மந்தப்பட்ட சுல்தான் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். பண்ணையில் இருந்த போதைப்பொருட்கள் அனைத்தும் இலங்கைக்கு படகுகள் மூலம் கடத்தப்பட இருந்த நிலையில், அதனை அதிகாரிகள் உடனடியாக சென்று கைப்பற்றினர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் அனைத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் ராமநாதபுரத்தில் உள்ள சுங்க அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.