National Sports Day (Photo Credit: LatestLY)

ஆகஸ்ட் 29, சென்னை (Sports News): மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஐ இந்தியா தேசிய விளையாட்டு தினமாக (National Sports Day) கொண்டாடுகிறது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் "ஹாக்கி மேஜிக்" என்று அழைக்கப்பட்ட தியான் சந்த், உலகின் சிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவர். மேலும் இந்நாளானது விளையாட்டு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை வலியுறுத்த, இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு அவர் அளித்த பங்களிப்பை நினைவு கூர்ந்து, அவரை ஒரு முன்னோடியாக போற்ற, இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபாடு கொள்ள ஊக்குவித்து, சாதிப்பதற்கான உத்வேகம் அளிக்க கொண்டாடப்படுகிறது. Paralympics Google Doodle: தொடங்குகிறது பாராலிம்பிக் போட்டிகள் 2024: கூகுளின் சிறப்பு டூடுல் இதோ.!

வரலாறு: மேஜர் தியான்சந்த் (Dhyan Chand) என்பவர் இந்தியாவின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்ற ஓர் அபாரமான ஹாக்கி வீரர். 'ஹாக்கி மேஜிக்' என்றழைக்கப்பட்ட அவர், தனது அசாதாரண திறமையால் உலகை வியக்க வைத்தார். தியான்சந்த் இருந்த காலகட்டத்தில், இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தொடர்ந்து வெற்றி பெற்றது. அவரது திறமையான விளையாட்டு இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பந்தை தனது ஹாக்கி ஸ்டிக்கில் ஒட்டிக்கொண்டு நடப்பது போல் காட்டும் அவரது திறமை உலகெங்கிலும் பரவலாகப் பேசப்பட்டது. அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஐ இந்தியா தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறது. இது விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.