ஜூலை 17, ஹராரே (Sports News): தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், நேற்று (ஜூலை 16) நடைபெற்ற 2வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்தது. SL Vs BAN 3rd T20I: 2-1 என தொடரை கைப்பற்றி அசத்தல்.. இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபாரம்..!
டக் அவுட் சாதனை:
இதனையடுத்து, 174 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 18.2 ஓவர்களில் 152 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் டக் அவுட்டானார். இதன்மூலம், நியூசிலாந்து அணியில் டி20 வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். டி20 போட்டியில் இதுவரை அவர் 7வது முறையாக டக் அவுட்டாகியுள்ளார்.
மோசமான சாதனை படைத்த ஜிம்மி நீஷம்:
சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில், இந்திய வீரர் விராட் கோலி மற்றும் பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆகியோரது இந்த மோசமான சாதனைகளையும் சமன்செய்துள்ளார். இதற்கு முன்னதாக விரட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோர் தலா 7 முறை டக் அவுட்டாகி இருந்தனர். தற்போது, ஜிம்மி நீஷம் 7வது முறையாக டக் அவுட்டாகி அவர்களின் சாதனையை சமன் செய்துள்ளார்.