அக்டோபர் 24, புனே (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 24) இந்தியா - நியூசிலாந்து (IND Vs NZ 2nd Test, Day 1) அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் (Pune) தொடங்கியது. IND Vs NZ: களத்தை நேரில் வந்து சோதனையிட்ட ரோஹித் சர்மா, கெளதம் காம்பிர்.. இந்தியா - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயார்.!
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் கழற்றிவிடப்பட்டுள்ளார். அதேபோல், நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதலில் நிதானமாக ஆரம்பித்தது. இதனிடையே கேப்டன் டாம் லதாம் 15 ரன்னிலும், வில் யங் 18 ரன்னிலும் அஸ்வின் (Ravichandran Ashwin) பந்தில் அவுட்டாகி வெளியேறினர்.
இந்நிலையில், மதிய உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 31 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 92 ரன்கள் அடித்துள்ளது. டெவான் கான்வே (Devon Conway) 108 பந்துகளில் 47 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து, விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
அஸ்வின் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தல்:
#Ashwin drew 1st blood in the #2ndTest trapping #Latham#GautamGambhir #KLRahul #Gill #Kuldeep #Axar #Sarfaraz #Kohli #Rohit #Siraj #Sundar #Rabada #Young #Ravindra #Conway #INDvNZ #PAKvENG #Pune #BanvSA #Jaiswal #IPL2025 #pant #Jadeja #Bumrah #Review #DRS pic.twitter.com/S3AEpHzR0B
— Yash Agarwal (@yashagarwal685) October 24, 2024