ODI Tri-Series 2025 Champions (Photo Credit: @TheRealPCB)

பிப்ரவரி 15, கராச்சி (Sports News): பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வந்த ஒருநாள் ட்ரை-சீரிஸ் 2025 (ODI Tri-Series in Pakistan 2025) தொடர், நேற்று நிறைவுபெற்றது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து (Pakistan Vs New Zealand Cricket) அணிகள் மோதின. பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி மோதிக்கொள்ளும் ஆட்டம், கராச்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. GG Vs RCB Women's WPL 2025 Highlights: டாடா மகளிர் டி20 பிரீமியர் லீக்.. வெற்றியுடன் தொடங்கிய பெங்களூர் அணி.. ரிச்சா கோஷ், எலிசே அசத்தல் ஆட்டம்.!

பாகிஸ்தான் அணி 242 ரன்கள் குவிப்பு:

போட்டியில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் வீரர்களில் பாபர் அசாம் 34 பந்துகளில் 29 ரன்னும், முகமது ரிஸ்வான் 76 பந்துகளில் 46 ரன்னும், முகமது சல்மான் 65 பந்துகளில் 46 ரன்னும், முகமது தையப் தாஹிர் 33 பந்துகளில் 38 ரன்னும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். 49.3 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 242 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்தின் வில் பந்துவீச்சின்போது 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். இதனையடுத்து, 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. PAK Vs NZ: ஒருநாள் ட்ரை-சீரிஸ் இறுதிப்போட்டி: பாக்., - நியூசி அணிகள் மோதல்.. பேட்டிங் செய்த பாகிஸ்தான்.! 

இலக்கை எட்டி வெற்றிவாகை சூடிய பாகிஸ்தான்:

நியூசிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர்களான டேவன், கேர், மிட்சல் ஆகியோர் நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். டேவன் கான்வே 74 பந்துகளில் 48 ரன்னும், கேன் வில்லியம்சன் 49 பந்துகளில் 34 ரன்னும், மிட்சல் 58 பந்துகளில் 57 ரன்னும், டாம் லேதம் 64 பந்துகளில் 56 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். 45.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 243 ரன்கள் எடுத்தது. இதன் வாயிலாக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட நியூசிலாந்து அணி, பாகிஸ்தானில் நடைபெற்ற டிரை-சிரிஸ் ஒடிஐ போட்டியை கைப்பற்றியது. இந்த வெற்றி பாகிஸ்தான் மண்ணில் சொந்த நாட்டு அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகவும் கருதப்படுகிறது

மைதானத்தில் புகுந்த பூனை, அமைதியாக உலாவி புறப்பட்ட காணொளி:

அசத்தலான கேட்ச்:

வெற்றிக்கோப்பையை கையில் இந்திய நியூசிலாந்து கிரிக்கெட் அணி: