PAK Vs SA 1st T20I, Toss (Photo Credit: @TsMeSalman X)

அக்டோபர் 28, ராவல்பிண்டி (Sports News): தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா (PAK Vs SA) அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டி, இன்று (அக்டோபர் 28) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது. IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா டி20 போட்டிகள் எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (Pakistan Vs South Africa):

சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, டோனோவன் ஃபெரீரா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 24 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் அணி 12 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், பாபர் அசாம், சல்மான் ஆகா (கேப்டன்), உஸ்மான் கான், ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:

குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஜோர்ஜி, டெவால்ட் ப்ரீவிஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டோனோவன் ஃபெரீரா (கேப்டன்), ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், லிசாட் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர், லுங்கி என்கிடி.