அக்டோபர் 28, சிட்னி (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) உடன் ஒரு நாள் போட்டிகளில் மோதியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி அடைந்த நிலையில், இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது இந்தியா Vs ஆஸ்திரேலியா அணிகள் (India Vs Australia) மோதும் டி20 போட்டிகள் தொடங்க உள்ளன. Shreyas Iyer: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு விலா எலும்பில் காயம்.. ஐசியூவில் அனுமதி.!
இந்தியா - ஆஸ்திரேலியா டி20ஐ போட்டிகள் (India Vs Australia T20I Series 2025):
இந்த போட்டியின் முதல் ஆட்டம் நாளை (அக்டோபர் 29) இந்திய நேரப்படி மதியம் 01:45 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள முனுக்கா ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் அக்டோபர் 31ஆம் தேதியும், மூன்றாவதாக ஆட்டம் நவம்பர் 02 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த போட்டியை நேரலையில் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலி, தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் (Sony Sports) பக்கத்திலும் பார்க்கலாம். ஒரு நாள் போட்டியில் தொடரை கைப்பற்ற தவறிய இந்தியா, டி20ஐ போட்டிகளில் தொடரை கைப்பற்றுமா? அல்லது ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியாவின் தோல்வி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்த ஸ்ரேயஸ் ஐயர், தற்போது உடல் நல குறைவால் சிகிச்சைகள் இருப்பதால் அவர் போட்டியில் கலந்து கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், பிற வீரர்கள் திறம்பட விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா Vs ஆஸ்திரேலியா (India Vs Australia Cricket Match):
போட்டி அணிகள்: இந்தியா Vs ஆஸ்திரேலியா
போட்டி நாள்: முதல் டி20ஐ போட்டி அக்டோபர் 29, 2025
போட்டி நேரம்: நண்பகல் 01:45 இந்திய நேரப்படி
போட்டி இடம்: மனுகா ஓவல்
போட்டி நேரலை: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, சோனி ஸ்போர்ட்ஸ் (Star Sports) டிவி