ஏப்ரல் 10, சண்டிகர் (Sports News): ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் நடந்து முடிந்த 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (PBKS Vs SRH) அணிகள் மோதின. இந்த ஆட்டம் முல்லன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. World Homeopathy Day 2024: எத்தனை மருத்துவமனை வந்து இருந்தாலும் காந்திக்கு இதான் பேவரைட்.. உலக ஹோமியோபதி தினம்..!

இதில், முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 64 ரன்களை அதிரடியாக ஆடி எடுத்திருந்தார். பின்னர், 183 என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப் அணி முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி கொண்டிருந்தது. இந்நிலையில், களத்தில் பொறுமையாக ஆடி கொண்டிருந்த சாம் கரண், நடராஜன் வீசிய 9.1 ஓவரில் அடித்த போது அதை மிட் ஆன் திசையில் நின்ற கேப்டன் பேட் கம்மின்ஸ் அற்புதமாக குதித்து பந்தை பிடித்துள்ளார். சாம் கரண் 22 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து கம்மின்ஸின் சிறப்பான கேட்ச்சினால் அவுட் ஆகி வெளியேறினார்.

முடிவில் ஐதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ஷசாங் சிங் 46 ரன்கள் குவித்தார். ஆட்டநாயகன் விருதை சிறப்பாக விளையாடி 64 ரன்கள் குவித்த நிதிஷ் ரெட்டி பெற்றுச் சென்றார். சாம் கரணின் விக்கெட்டை வீழ்த்திய பேட் கம்மின்ஸின் அதிரடி செயல்பாடுகள் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.