PKL 2025 Sep 04 Match (Photo Credit: @kabaddilovers__ X)

செப்டம்பர் 04, விசாகப்பட்டினம் (Sports News): 2025 ப்ரோ கபடி லீக் (PKL) தொடர், 12வது சீசன் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்தத் தொடரில் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், யு மும்பை, ஹரியானா ஸ்டீலர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், உபி யோதாஸ், டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடர் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. 2025 ப்ரோ கபடி லீக் சீசன் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். ENG Vs SA 2nd ODI, Toss: இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!

ப்ரோ கபடி லீக் 2025 இன்றைய போட்டிகள் (Pro Kabaddi League 2025 Today Matches):

இதில், நேற்று (செப்டம்பர் 03) இரவு 8 மணிக்கு நடந்த 11வது லீக் போட்டியில் புனேரி பல்தான்ஸ் 45-36 என பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நடந்த 12வது லீக் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் - யு மும்பை அணிகள் மோதிய ஆட்டம் 36-36 என சமனில் முடிந்தது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 04) இரவு 8 மணிக்கு நடைபெறும் 13வது லீக் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் (Jaipur Pink Panthers Vs Telugu Titans) அணிகளும், இரவு 9 மணிக்கு 14வது லீக் போட்டியில், புனேரி பல்தான்ஸ் - டபாங் டெல்லி (Puneri Paltan Vs Dabang Delhi) அணிகளும் மோதுகின்றன.