RCB Win IPL 2025 (Photo Credit: @IPL X)

ஜூன் 04, பெங்களூரு (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் இறுதிப்போட்டி, நேற்று (ஜூன் 03) நடைபெற்று முடிந்தது. இதில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (RCB Vs PBKS, IPL 2025 Final) அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் அடித்தது. இதனையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம், ஆர்சிபி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். RCB Won IPL Final 2025: முதல்முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி.. பஞ்சாப் அணி போராடி தோல்வி..!

பேருந்து அணிவகுப்பு ரத்து:

இந்நிலையில், ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட (RCB Victory Celebrations) பெங்களூருவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வரை சந்திக்கவுள்ளனர். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு திறந்தவெளி பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் பேருந்து அணிவகுப்பு நடைபெற்றால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாது என காவல்துறையினர் பேருந்து அணிவகுப்பை ரத்து செய்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்சிபி சாம்பியன் ஐபிஎல் 2025: