SL Vs BAN 2nd Test, Day 3 (Photo Credit: @SunilManda507 X)

ஜூன் 27, கொழும்பு (Sports News): வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (SL Vs BAN Test Series 2025) விளையாடி வருகிறது. கடந்த ஜூன் 17ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி, நேற்று முன்தினம் (ஜூன் 25) முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை, சோனி லிவ் தொலைக்காட்சி, பேன்கோடு இணையதளம் மற்றும் ஆப்பில் நேரலையில் (SL Vs BAN Test Live Streaming) பார்க்கலாம். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (SL Vs BAN 2nd Test), டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். SL Vs BAN 2nd Test, Day 2: பதும் நிசங்கா - சண்டிமால் இணை அபாரம்.. இலங்கை 43 ரன்கள் முன்னிலை..!

இலங்கை எதிர் வங்கதேசம் (Sri Lanka Vs Bangladesh):

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 46 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில், அசித்த பெர்னாண்டோ மற்றும் சோனல் தினுஷா தலா 3, விஷ்வா பெர்னாண்டோ 2, தரிந்து ரத்நாயக்க மற்றும் தனஞ்சய டி சில்வா தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். இதன்பின்னர், களமிறங்கிய இலங்கை அணி 116.5 ஓவர்களில் 458 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 158 ரன்கள், தினேஷ் சண்டிமால் 93 ரன்கள், குஷால் மெண்டிஸ் 84 ரன்கள் அடித்து அவுட்டாகினர். வங்கதேச அணி சார்பில், தைஜுல் இஸ்லாம் 5, நயீம் ஹசன் 3, நஹித் ராணா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

வங்கதேசம் தடுமாற்றம்:

இதனையடுத்து, வங்கதேச அணி 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வரிசை வீரர்களான ஷத்மான் இஸ்லாம் 12, அனாமுல் ஹக் 19, மொமினுல் ஹக் 15, நஜ்முல் ஹொசைன் சாண்டோ 19 ரன்கள் என சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இறுதியில், வங்கதேச அணி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 38.4 ஓவர்கள் விளையாடி 6 விக்கெட்களை இழந்து 115 ரன்கள் அடித்தது. இன்னும், வங்கதேச அணி 96 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.