ஜூலை 16, கொழும்பு (Sports News): வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரையும், 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது. இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டி20 போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில், வங்கதேச அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. SL Vs BAN 3rd T20I: இலங்கை - வங்கதேசம் 3வது டி20.. தொடரை வெல்ல போவது யார்..?
இலங்கை எதிர் வங்கதேசம் (Sri Lanka Vs Bangladesh):
இந்நிலையில், இலங்கை - வங்கதேசம் (SL Vs BAN) அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, இன்று (ஜூலை 16) கொழும்புவில் நடைபெறுகிறது. சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி, லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 19 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இலங்கை அணி 12 போட்டிகளிலும், வங்கதேச அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இலங்கை (பிளேயிங் லெவன்):
பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), தசுன் ஷனக, மஹீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வான்டர்சே, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷாரா.
வங்கதேசம் (பிளேயிங் லெவன்):
தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், லிட்டன் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், மஹேதி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான்.