RSA Vs AFG SF 1 (Photo Credit: @cricbuzz X)

ஜூன் 27, டிரினிடாட் (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரின் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் (RSA Vs AFG Semi Final 1) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். Kerala Kadala Curry Recipe: சுவையான கேரளா கடலை கறி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

வெறும் 11.5 ஓவர்களில் 56 ரன்கள் மட்டுமே அடித்து, ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அஸ்மத்துல்லா அதிகபட்சமாக 10 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர், 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 60 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.