
ஜூலை 05, ராஞ்சி (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி (MS Dhoni). இதுவரை கிரிக்கெட்டில் பல வியக்கத்தக்க சாதனைகளை செய்துள்ள தோனி, சச்சினுக்கு பின் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். அதிரடி பேட்டிங், விக்கெட் கீப்பிங் போன்றவற்றில் கைதேர்ந்த தோனி திருமண வாழ்க்கையில் காதலித்து கரம்பிடித்தவர் ஆவார். எம்.எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரியில் தோனியின் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களும், அதன் பின் அவர் சாதனை படைத்த நிகழ்வுகளும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். தோனியின் அர்பணிப்பு & வெற்றிக்கு அடையாளமாக மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்து இருக்கிறது. ரூ.56,000 சம்பளத்தில் இஸ்ரோவில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க.!
திருமண நாள் கொண்டாட்டம்:
ரசிகர்களால் தல, கேப்டன் கூல், மஹி என அழைக்கப்படும் எம்.எஸ். தோனி கடந்த 2010ம் ஆண்டு தனது காதலி சாக்ஷியை கரம்பிடித்தார். தம்பதிகளுக்கு ஜீவா சிங் தோனி என்ற மகளும் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அவ்வப்போது குடும்பத்தினர் மைதானத்துக்கு வந்து நேரில் போட்டியை கண்டுகளிப்பார்கள். இந்நிலையில், தோனியின் திருமண நாள் நேற்று நள்ளிரவில் சிறப்பிக்கப்பட்டது. தம்பதிகள் இருவரும் தங்களின் திருமண நாளை கேக் வெட்டி சிறப்பித்தனர். இதன் புகைப்படங்களை சாக்ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
தோனி - சாக்ஷி தம்பதி திருமண நாள் கொண்டாட்ட புகைப்படம்:
View this post on Instagram