SA Vs NZ 1st Batting (Photo Credit: @ESPNcricinfo X)

ஜூலை 16, ஹராரே (Sports News): தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முத்தரப்புத் தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிபோட்டிக்கு செல்லும். அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும். SA Vs NZ, Toss: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றி பயணம் தொடருமா..?

தென்னாப்பிரிக்கா எதிர் நியூசிலாந்து (South Africa Vs New Zealand):

இந்நிலையில், இன்று (ஜூலை 16) நடைபெறும் 2வது லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ரஸ்ஸி வான் டெர் டசென் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் டெவோன் கான்வே 9, டிம் சீஃபர்ட் 22 ரன்னில் அவுட்டாகினர். அடுத்து வந்த டேரில் மிட்செல் 5, மிட்செல் ஹே 2, ஜேம்ஸ் நீஷம் 0 என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதன்பின்னர், டிம் ராபின்சன் - பெவோன் ஜேக்கப்ஸ் இணை அபாரமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. டிம் ராபின்சன் அரைசதம் (75* ரன்கள்) கடந்து அசத்தினார். மறுபுறம், பெவோன் ஜேக்கப்ஸ் 44* ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக குவேனா மபாகா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்):

ரீசா ஹென்ட்ரிக்ஸ், லுவாண்ட்ரே பிரிட்டோரியஸ், ராஸ்ஸி வான் டெர் டசன் (கேப்டன்), ரூபின் ஹெர்மன், டெவால்ட் ப்ரீவிஸ், ஜார்ஜ் லிண்டே, செனுரன் முத்துசாமி, கார்பின் போஷ், ஜெரால்ட் கோட்ஸி, குவேனா மபாகா, லுங்கி என்கிடி.

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):

டிம் சீஃபர்ட், டெவோன் கான்வே, டிம் ராபின்சன், டேரில் மிட்செல், மிட்செல் ஹே, பெவோன் ஜேக்கப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மாட் ஹென்றி, இஷ் சோதி, ஜேக்கப் டஃபி.