Warm Welcome To Indian Paralympics (Photo Credit: @TheKhelIndia X)

செப்டம்பர் 10, புதுடெல்லி (Sports News): பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் (Paris) நடைபெற்ற பாராலிம்பிக் (Paralympics) போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி நேற்று (செப்டம்பர் 09) நிறைவு பெற்றது. இதில், 168 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத்திறனாளி வீரர்கள் சாதித்தனர். இந்தியா சார்பில் 84 பேர், 12 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். தடகளம், துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன், வில்வித்தை, ஜூடோ என 5 போட்டிகளில் அசத்திய வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை வென்றனர்.  Team India Squad for IND Vs BAN: இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.! விபரம் உள்ளே.!

உற்சாக வரவேற்பு:

பாரிஸ் பாராலிம்பிக்கில் 7 தங்கம் உட்பட மொத்தம் 29 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 18-வது இடத்தை பிடித்தது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 10) பாரிஸில் இருந்து திரும்பிய இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு (Warm Welcome To Indian Paralympics) அளிக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் (Delhi Airport) மேள தாளத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ரசிகர்கள் பலரும் பாராலிம்பிக் வீரர்களுடன் மகிழ்ச்சியாக மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

புதிய சாதனை:

கடந்த 2021-ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கம் கிடைத்திருந்தது. பாராலிம்பிக்கில் 1968 முதல் 2021 வரை இந்தியா (9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம்) மொத்தம் 31 பதக்கம் வென்றது. ஆனால், இந்த 2024-ஆம் ஆண்டு பாரிஸில் மட்டும் 29 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு: