Jasmine Palini | Carlos Algaraz File Pic (Photo Credit: Wikipedia)

ஜூலை 03, லண்டன் (Sports News): விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் (Wimbledon Grand Slam Tennis Series) லண்டனில் நேற்று முன்தினம் (ஜூலை 01) கோலாகமாக ஆரம்பமானது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் 7-6 (7/3), 7-5, 6-2 என்ற நேர் செட்களில் எஸ்டோனியாவின் மார்க் லஜாலை தோற்கடித்தார்.போட்டித் தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் மெத்வதெவ் 6-3, 6-4, 6-2 என்ற செட்களில், அமெரிக்காவின் அலெக்ஸாண்டர் கோவாசெவிக்கை வீழ்த்தினார். College Girl Pregnant: இன்ஸ்டாகிராம் பழக்கம்; தனிமையில் சந்தித்து உல்லாசம்.. கல்லூரி மாணவி 3 மாத கர்ப்பம்..!

மேலும், 10-ஆம் இடத்தில் இருக்கும் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 6-4, 7-5 என, செர்பியாவின் டுசான் லஜோவிச்சை வெளியேற்றி அசத்தினார். இதனிடையே, 22-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோ, 18-வது இடத்திலிருந்த அர்ஜென்டீனாவின் செபாஸ்டியன் பேஸ், 19-ஆம் இடத்திலிருந்த சிலியின் நிகோலா ஜேரி ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவினார்.

இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில், தரவரிசையின் 7-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 7-5, 6-3 என்ற கணக்கில் ஸ்பெயினின் சாரா சொரைப்ஸ் டோர்மோவை வீழ்த்தினார். 9-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் மரியா சக்காரி 6-3, 6-1 என அமெரிக்காவின் மெகார்ட்னி கெஸ்லரை வெற்றி கண்டார். 14-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டரியா கசாட்கினா 6-3, 6-0 என சீனாவின் ஷுவாய் ஜாங்கையும், 28-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 6-1, 7-6 (7/1) என அர்ஜென்டீனாவின் நாடியா பொடொரோஸ்காவையும் தோற்கடித்தனர்.