Sumit Nagal (Photo Credit: @ddsportschannel X)

ஆகஸ்ட் 27, நியூயார்க் (Sports News): 2024ஆம் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் (US Open Tennis), நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டி அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு, எப்போதும் போல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், வெற்றி வாகை சூடுவாரா என்ற ஆவல், ரசிகர்களிடையே அதிகளவில் இருக்கிறது. ஏனெனில் இந்த தொடரில் வெற்றி பெற்றால், அது அவருக்கு 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். Tanvi Patri Wins Asian Junior Badminton 2024: ஆசிய ஜூனியர் பாட்மிண்டன்.. தன்வி பத்ரி சாம்பியன்..!

முதல் சுற்று: நேற்று முதல் சுற்றில் உலக தரவரிசையில் 72வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சுமித் நாகல் (Sumit Nagal), நெதர்லாந்து வீரர் டாலன் கிரீஸ்க்பூர் (Tallon Griekspoor) என்பவரை எதிர்க்கொண்டார். அதில், 1-6, 3-6, 6-7 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை 629 கோடி ரூபாயாகும். இதில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 30 கோடி ரூபாய் பரிசுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளியும், இரண்டாவது இடம் பிடிப்பவருக்கு 15 கோடி ரூபாய் பரிசும், இரட்டையர் பிரிவில் வாகை சூடும் இணைக்கு ஆறரை கோடி ரூபாயும், கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியனாகும் இணைக்கு ஒரு கோடியே 67 லட்சம் ரூபாயும் பரிசாக கிடைக்கும்.