All India MCC Murugappa Gold Cup Hockey Tournament 2024 (Photo Credit: Instagram)

செப்டம்பர் 17, சென்னை (Sports News): சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 95-வது அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி (All India MCC-Murugappa Gold Cup Hockey Tournament) நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (Tube Investments of India Ltd) நிறுவனத்தின் செயல்தலைவர் அருண் முருகப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஹாக்கி போட்டி:

அப்போது, 95-வது அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் (Mayor Radhakrishnan Hockey Stadium) நடைபெற உள்ளது. இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 7 லட்சம் பரிசுத்தொகையும், 2-ஆம் பிடிக்கும் அணிக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும், மூன்றாவது மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 50,000 பரிசுத்தொகையும் வழங்கப்படும். Virat Kohli Practice In Chepauk: தீவிர பயிற்சியில் விராட் கோலி.. சேப்பாக்கம் மைதானத்தின் சுவரை உடைத்த வீடியோ வைரல்..!

பரிசுத்தொகை:

மேலும், சிறந்த முன்கள வீரர், சிறந்த மிட்ஃபீல்டர், சிறந்த கோல் கீப்பர், நம்பிக்கைக்குரிய வீரர், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் ஆகியோர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளன. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வேஸ், முன்னாள் சாம்பியன் இந்தியன் ஆயில் கார்பரேஷன், தமிழ்நாடு ஹாக்கி அணி, ஒடிஷா ஹாக்கி அணி என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றனர். 10 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

போட்டி விவரம்:

இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தினமும் 3 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் போட்டி மதியம் 2.15 மணிக்கும், 2-வது போட்டி மாலை 4 மணிக்கும் 3-வது போட்டி இரவு 6 மணிக்கும் நடைபெறும். ஹாக்கி (Hockey) போட்டிகளை காண பார்வையாளர் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.