Shreyas Iyer | Ishan Kishan (Photo Credit: @anurandey_7 X | @mufaddal_vohra X)

ஏப்ரல் 21, மும்பை (Sports News): பிசிசிஐ (BCCI) 2024-25 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை அறிவித்துள்ளது. இதில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஏ+ பிரிவில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) மற்றும் இஷான் கிஷன் (Ishan Kishan) ஆகியோர் மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தங்களின் முதல் பிசிசிஐ ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர். Virat Kohli: வெற்றிகொண்டாட்டத்தில் விராட் கோலி.. இறுதிவரை ஆட்டம் இழக்காமல் அசத்தல்.. பெங்களூர் அசத்தல் வெற்றி.!

பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தப் பட்டியல் 2024-25:

ஏ+ கிரேடு: ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா

ஏ கிரேடு: முகமது சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பந்த்

பி கிரேடு: சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர்

சி கிரேடு: ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் படிதார், துருவ் ஜூரெல், சர்பராஸ் கான், நிதீஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா

சம்பள விவரங்கள்:

  • ஏ+ பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்படும்.
  • ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்படும்.
  • பி பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்படும்.
  • சி பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்படும்.

பிசிசிஐ ஒப்பந்த பட்டியல் அறிவிப்பு: