ZIM Vs SL 1st ODI 1st Batting (Photo Credit: @ZimCricketv X)

ஆகஸ்ட் 29, ஹராரே (Sports News): இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜிம்பாப்வே - இலங்கை (ZIM Vs SL) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (ஆகஸ்ட் 29) இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்கியது. ZIM Vs SL 1st ODI: ஜிம்பாப்வே - இலங்கை மோதும் முதலாவது ஒருநாள் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!

ஜிம்பாப்வே எதிர் இலங்கை (Zimbabwe Vs Sri Lanka):

இவ்விரு அணிகள் இதுவரை 64 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஜிம்பாப்வே அணி 12 போட்டிகளிலும், இலங்கை அணி 49 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளுக்கு முடிவில்லை. ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரை ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் பார்க்கலாம். இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சீன் வில்லியம்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இலங்கை அபாரம்:

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 298 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 76 ரன்கள், ஜனித் லியனகே 70* ரன்கள், கமிந்து மெண்டிஸ் 57 ரன்கள் அடித்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் ரிச்சர்ட் ங்கராவா 2, பிளசிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ஜிம்பாப்வே அணி வீரர்கள்:

பென் குர்ரன், பிரையன் பென்னட், பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, வெஸ்லி மாதேவெரே, டோனி முனியோங்கா, பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, பிளசிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு. AFG Vs PAK: யுஏஇ முத்தரப்பு டி20 தொடர்; தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாளை மோதல்..!

இலங்கை அணி வீரர்கள்:

பதும் நிசங்கா, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, மஹேஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்க.