ஆகஸ்ட் 06, லண்டன் (Sports News): சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், மூன்று இடங்கள் முன்னேறி முதல் முறையாக டாப் 5க்குள் நுழைந்துள்ளார். அவர் இத்தொடரில் 411 ரன்கள் குவித்ததோடு, கடைசி டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் 792 புள்ளிகளைப் பெற்று இந்த இடத்தை எட்டியுள்ளார். ZIM Vs NZ 2nd Test: ஜிம்பாப்வே - நியூசிலாந்து 2வது டெஸ்ட்.. நாளை பலப்பரீட்சை..!
கில், பந்த் சரிவு:
காயம் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியிருந்த ரிஷப் பண்ட் ஒரு இடம் சரிந்து 8வது இடத்திலும், ஓவல் டெஸ்டில் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படாததால், சுப்மன் கில் நான்கு இடங்கள் சரிந்து 13வது இடத்திலும் உள்ளனர். மறுபுறம், இங்கிலாந்து வீரர்களான ஜோ ரூட் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்து தனது முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அதே சமயம், அதிரடி வீரர் ஹாரி புரூக் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்தின் அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியல்:
1. ஜோ ரூட் (இங்கிலாந்து) - 908 புள்ளிகள்
2. ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து) - 868 புள்ளிகள்
3. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 858 புள்ளிகள்
4. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 816 புள்ளிகள்
5. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா) - 792 புள்ளிகள்
6. டெம்பா பவுமா (தென்னாப்பிரிக்கா) - 790 புள்ளிகள்
7. கமிந்து மெண்டிஸ் (இலங்கை) - 781 புள்ளிகள்
8. ரிஷப் பந்த் (இந்தியா) - 768 புள்ளிகள்
9. டேரில் மிட்செல் (நியூசிலாந்து) - 748 புள்ளிகள்
10. பென் டக்கெட் (இங்கிலாந்து) - 747 புள்ளிகள்