ZIM Vs NZ 2nd Test (Photo Credit: @thestandardzim X)

ஆகஸ்ட் 06, புலவாயோ (Sports News): ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று, தொடரை சமன் செய்ய கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ZIM Vs NZ: நாதன் ஸ்மித் அவுட்.. சக்காரி ஃபால்க்ஸ் இன்.., ஜிம்பாப்வே-நியூசிலாந்து தொடரில் மாற்றம்..!

ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (Zimbabwe Vs New Zealand):

இந்நிலையில், ஜிம்பாப்வே - நியூசிலாந்து (ZIM Vs NZ) அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, நாளை (ஆகஸ்ட் 07) புலவாயோவில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும். நியூசிலாந்து அணி தனது பலமான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மூலம் ஜிம்பாப்வேக்கு பெரும் சவாலாக இருக்கும். ஜிம்பாப்வே தனது சொந்த மண்ணில் கடுமையாக போராடி வெற்றி பெற முயற்சிக்கும். ஜிம்பாப்வே அணியில் பிரெண்டன் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார். இது அணிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2வது டெஸ்ட் போட்டி ஜிம்பாப்வேக்கு தொடரை சமன் செய்ய ஒரு முக்கியமான வாய்ப்பாகும். அதேநேரத்தில், நியூசிலாந்து அணி தொடரை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும்.

ஜிம்பாப்வே அணி வீரர்கள்:

பிரையன் பென்னட், பென் குர்ரன், நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரெய்க் எர்வின் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, தஃபத்ஸ்வா சிகா, நியூமன் நியாம்ஹுரி, வின்சென்ட் மசெகேசா, பிளெஸிங் முசரபானி, தனகா சிவாங்கா, ப்ரெண்டன் ரொய்ஸ்கா, வெல்சான் டெய்லர், டாய்லர், மகோனி, கிளைவ் மடாண்டே, ட்ரெவர் குவாண்டு.

நியூசிலாந்து அணி வீரர்கள்:

வில் யங், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), சக்காரி ஃபால்க்ஸ், மாட் ஹென்றி, பென் லிஸ்டர், டாம் லாதம், ஜேக்கப் டஃபி, அஜாஸ் படேல், மேத்யூ பிஷர்.