மார்ச் 23, சென்னை (Sports News): ஐபிஎல் 2024-ஆம் ஆண்டு (IPL 2024) 17-வது சீசன் கிரிக்கெட் தொடர் நேற்று மிகச் சிறப்பாக தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (CSK Vs RCB) அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 173-6 என்று முடித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48 ரன்கள் குவித்தார். பின்னர், 174 என்ற இலக்கை நோக்கி இறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 176 ரன்களை எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரவீந்திரா 37 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. CSK Vs RCB Highlights: பெங்களூர் அணியை கதறவிட்ட சென்னை சிங்கங்கள்: முதல் போட்டியில் கர்ஜனை வெற்றி..!
சென்னை அணி வீரர் ருதுராஜ் கெய்குவாட் கேப்டனாக பொறுப்பேற்ற, அவரது முதல் போட்டியிலேயே அணி வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்குப்பின் அவர் கூறுகையில், முதல் 3 ஓவர்களை தவிர மீதி உள்ள ஓவர்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. 10, 15 ரன்கள் குறைவாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். டூபிளஸிஸ், மேக்ஸ்வெல் விக்கெட்களை விரைவாக எடுத்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
மேலும், கேப்டன்ஷி பொறுப்பை நான் மிகவும் ரசித்து விளையாடினேன். எந்த வித கூடுதலான அழுத்ததையும் நான் உணரவில்லை. அணியில் தோனி என்னுடன் இருக்கிறார். இதனால், எந்த நிலைமையையும் கையாளும் திறன் என்னிடன் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.