DD Vs CSG (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 16, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 19ஆம் தேதி வரை வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று (ஜூன் 15) நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில், திருச்சி அணியை வீழ்த்தி திருப்பூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 13வது லீக் போட்டியில், சேலம் அணியை வீழ்த்தி நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ITT Vs SS: சேலம் அணி 'ஹாட்ரிக்' வெற்றி.. திருப்பூர் போராடி தோல்வி..!

திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Dindigul Dragons Vs Chepauk Super Gillies):

இந்நிலையில், இன்று (ஜூன் 16) திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (DD Vs CSG, Match 14) அணிகள் மோதுகின்றன. ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி, பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், திண்டுக்கல் அணி 4 போட்டியிலும், சேப்பாக் அணி 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள்:

ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), ஷிவம் சிங், விமல் குமார், , பாபா இந்திரஜித், மான் பாஃப்னா, ஆர் கே ஜயந்த், தினேஷ் எச், ஹன்னி சைனி, எம் கார்த்திக் சரண், டிடி சந்திரசேகர், கணேசன் பெரியசாமி, எம் விஜு அருள், சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி, அத்துல் விட்கர், ராஜ்விந்தர் சிங்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்:

பாபா அபராஜித் (கேப்டன்), ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், விஜய் ஷங்கர், ஆஷிக் ரெஹ்மான், ஜகதீசன் நாராயண், ஸ்வப்னில் சிங், அபிஷேக் தன்வர், என் சுனில் கிருஷ்ணா, தினேஷ் ராஜ் எஸ், கிருபாகர் ரவீந்தர், பிரேம் குமார், ராஜலிங்கம் ஜி, ஆர் ராஜன், அக்ரம் கான், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆர், ரோஹித் சுதர், டிடி லோகேஷ் ராஜ், எம் சிலம்பரசன், அர்ஜுன் மூர்த்தி.