
ஜூன் 23, திருநெல்வேலி (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடைபெற்று முடிந்தன. இதனையடுத்து, 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 23) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழஸ் (CSG Vs TGC, Match 21) அணிகள் மோதுகின்றன. CSG Vs TGC Toss Update: திருச்சி அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. ஆதிக்கம் செலுத்த போவது யார்..?
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (Chepauk Super Gillies Vs Trichy Grand Cholas):
பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் அணி, ஜெயராமன் சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி அணியை எதிர்கொள்கிறது. நடப்பு தொடரில், சேப்பாக் அணி 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. திருச்சி அணி 4 போட்டிகளில் விளையாடி 1 வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ஜெயராமன் சுரேஷ் குமார் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
சேப்பாக் அபாரம்:
அதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் அணிக்கு கே ஆஷிக் 5 ரன்னில் அவுட்டானார். ஹரிஹரன் 25 ரன்னில் வெளியேறினார். இதன் பின்னர், கேப்டன் அபராஜித் - விஜய் சங்கர் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டனர். கேப்டன் அபராஜித் அரைசதம் (63 ரன்கள்) கடந்து அவுட்டாகினார். அடுத்து விஜய் சங்கர் 59 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். சேப்பாக் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் அடித்தது.