மார்ச் 20, புதுடெல்லி (New Delhi): மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு (Ministry of Youth Affairs and Sports) அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra), துருக்கி நாடி உள்ள அந்தல்யா (Antalya, Turkey), குளோரியா விளையாட்டு அரங்கில் 61 நாட்கள் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பயிற்சிக்கான செலவுகளை அரசு ஏற்கும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தின் கீழ் நிதிஉதவி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. Benedict Anto Issue:100 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பாதிரியார் அதிரடி கைது.. விசாரணை நடத்த அதிகாரிகள் தீவிரம்.!
இந்த இலக்குத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு நீரஜ் பயிற்சி பெற்ற நிலையில், நடப்பு ஆண்டிலும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையில் பயிற்சி பெற துருக்கிக்கு செல்லவுள்ளார்.
பயிற்சியின் போது நீரஜ் சோப்ராவுடன் பயிற்சியாளர் கிளாஸ் பர்டோனிஸ், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரின் விமான கட்டணம், தாங்கும் இடத்திற்கான செலவு, மருத்துவ காப்பீடு மற்றும் உள்ளூர் போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.