ஜூலை 24, ஹராரே (Sports News): ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். நடந்து முடிந்த 5 லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில், ஜிம்பாப்வே அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறியது. இதனால், முதல் இரண்டு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிபோட்டியில் மோதவுள்ளன. அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும். ZIM Vs NZ, Toss: நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே..?
ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (Zimbabwe Vs New Zealand):
இந்நிலையில், இன்று (ஜூலை 24) நடைபெறும் 6வது லீக் போட்டியில், ஜிம்பாப்வே - நியூசிலாந்து (ZIM Vs NZ) அணிகள் மோதுகின்றன. சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அதிரடி ஆட்டம்:
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் 10 ரன்னில் அவுட்டானார். இதன்பின்னர் டிம் சீஃபர்ட் 75, ரச்சின் ரவீந்திரா 63 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அடுத்து வந்த மார்க் சாப்மேன் 0, பெவோன் ஜேக்கப்ஸ் 0, மிட்செல் சான்ட்னர் 7 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இறுதியில், மைக்கேல் பிரேஸ்வெல் (26* ரன்கள்) அதிரடி காட்ட நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் அடித்தது.
ஜிம்பாப்வே (பிளேயிங் லெவன்):
டியான் மியர்ஸ், பிரையன் பென்னட், கிளைவ் மடாண்டே, சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரியான் பர்ல், தஷிங்கா முசெகிவா, டோனி முனியோங்கா, டினோடெண்டா மபோசா, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ங்கராவா, ட்ரெவர் குவாண்டு. ENG Vs IND 4th Test, Day 2: களத்திற்கு திரும்பிய ரிஷப் பந்த்.. வலுவான நிலையில் இந்தியா..!
நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):
டிம் ராபின்சன், டிம் சீஃபர்ட், ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஜகாரி ஃபௌல்க்ஸ், மாட் ஹென்றி, இஷ் சோதி, வில்லியம் ஓர்ர்க்.