ஆகஸ்ட் 12, பாரிஸ் (Sports News): பாரிஸ் ஒலிம்பிக் (Paris Olympics 2024) போட்டி தொடரின் நிறைவு விழா (Paris Olympics Closing Ceremony) நேற்று (ஆகஸ்ட் 11) கோலாகலமாக நடந்து முடிந்தது. கடந்த ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி, இந்திய நேரப்படி இன்று (ஆகஸ்ட் 12) அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி அதிகாலை 3:30 மணிவரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மைதானத்தில் சுற்றி வந்தனர். Paris Olympics 2024: கோலாகலமாக நிறைவுபெற்றது பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: பதக்கபட்டியலில் 71 வது இடத்தில் இந்தியா.!
இதன் நிறைவு விழாவில் திடீரென ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் (வயது 62)நிறைவு விழா நடைபெறும் மைதானத்தில் மேற்கூரையிலிருந்து குதித்தார். டாம் குரூஸ் (Tom Cruise) வருகை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பிறகு, அங்குள்ள விளையாட்டு வீரர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். இதனையடுத்து, டாம் குரூஸ் ஒலிம்பிக் கொடியை ஏந்தி பைக்கில் வேகமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டார். தனது பைக்கில் ஒலிம்பிக் கொடியை விமான தளத்திற்கு கொண்டு சென்றார்.
அடுத்த ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சல்ஸ் (LA28) நகரில் நடைபெறுவதையொட்டி கொடியை அவர் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்வதாக அறிவிக்கப்பட்டது. சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற நிறைவு விழாவில் சில நிமிடங்களில் தோன்றிய டாம் குரூஸ் தன்னுடைய அபாரமான சாகசத்தால் பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் கவனத்தை ஈர்த்தார்.
Tom Cruise is amazing! #ParisOlympics #ClosingCeremony #LosAngeles2028 pic.twitter.com/QDrYgmUSoy
— Sarah O'Connell (@SarahO_Connell) August 11, 2024