ZIM Vs NZ 1st Test, Day 3 Lunch Break (Photo Credit: @ZimCricketv X)

ஆகஸ்ட் 01, புலவாயோ (Sports News): நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (ZIM Vs NZ) தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஜூலை 30) புலவாயோவில் தொடங்கியது. முன்னதாகவே, காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதல் டெஸ்டில் இருந்து விலகினார். இந்நிலையில், கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி, மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ZIM Vs NZ 1st Test, Day 2: நியூசிலாந்து அபாரம்.. ஜிம்பாப்வே 127 ரன்கள் பின்னிலை..!

ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (Zimbabwe Vs New Zealand):

இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக கிரேக் எர்வின் 39, தஃபட்ஸ்வா சிகா 30 ரன்கள் அடித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்றி 6, நாதன் ஸ்மித் 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டெவோன் கான்வே 88 ரன்கள், டேரில் மிட்செல் 80 ரன்கள் அடித்தனர். ஜிம்பாப்வே சார்பில் பிளெஸ்ஸிங் முசரபானி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே தடுமாற்றம்:

இதன்பின்னர், ஜிம்பாப்வே அணி 158 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் பிரையன் பென்னட் 18, பென் குர்ரான் 11 ரன்னில் நடையை கட்டினர். நிக் வெல்ச் 4, வின்சென்ட் மசெகேசா 2 ரன்களில் வெளியேறினர். பொறுமையாக விளையாடி வந்த சீன் வில்லியம்ஸ் 49 ரன்னிலும், கேப்டன் கிரேக் எர்வின் 22 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். 3ஆம் மதிய உணவு இடைவேளை வரை ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்களை இழந்து 114 ரன்கள் அடித்து, இன்னும் 44 ரன்கள் பின்னிலையில் உள்ளது. சிக்கந்தர் ராசா 4*, தஃபட்ஸ்வா சிகா 0* என களத்தில் உள்ளனர்.

ஜிம்பாப்வே (பிளேயிங் லெவன்):

பிரையன் பென்னட், பென் குர்ரான், நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரேக் எர்வின் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, தஃபட்ஸ்வா சிகா, நியூமன் நியாம்ஹுரி, வின்சென்ட் மசெகேசா, பிளெஸ்ஸிங் முசரபானி, தனகா சிவாங்கா.

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):

டெவோன் கான்வே, வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, வில்லியம் ஓரூர்கே.