Zimbabwe Vs New Zealand (Photo Credit: @BLACKCAPS X)

ஜூலை 17, ஹராரே (Sports News): தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிபோட்டிக்கு முன்னேறும். அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும். James Neesham: விராட் கோலி, பாபர் அசாம் சாதனையை சமன் செய்த ஜிம்மி நீஷம்.. 'டக் அவுட்' சாதனை..!

ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (Zimbabwe Vs New Zealand):

முத்தரப்பு தொடரின் 2வது போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், நாளை (ஜூலை 18) நடைபெறும் 3வது லீக் போட்டியில், ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஜிம்பாப்வே அணி வீரர்கள்:

சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், வெஸ்லி மாதேவெரே, டியான் மியர்ஸ், ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ங்காரவா, பிளஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டன்டா, தஃபட்ஸோ த்வாடென்சி, தஃபட்ஸுவாடென்சி வின்சென்ட் மசெகேசா.

நியூசிலாந்து அணி வீரர்கள்:

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, டிம் சீஃபர்ட், இஷ் சோதி, டெவன் கான்வே, டிம் ராபின்சன், ஜேம்ஸ் நீஷாம், மிட்ச் ஹே,