Robbery (photo Credit: Pixabay)

ஜூன் 05, பெரம்பூர் (Chennai News): சென்னை, பெரம்பூரில் உள்ள கொடுங்கையூரில் விக்டோரியா ஆர்.சி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தேவி (வயது 40). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சூரப்பட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் தனது மகளின் 12-ஆம் வகுப்பு சான்றிதழை வாங்கி வருவதற்காக சென்றுள்ளார். School Girl Rape: வீட்டை விட்டு வெளியேறி சென்ற பள்ளி மாணவி; அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

அப்போது, தனது 11 சவரன் வளையல்கள் (Bangle) மற்றும் பிளாட்டினம் (Platinum) கம்மலை, வீட்டில் உள்ள அலங்கார மேசை மீது வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர், மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டில் வைத்திருந்த அந்த நகைகள் அனைத்தும் திருடுபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், தேவி வெளியே சென்ற நேரத்தில் அவரது மகள்தான் வீட்டில் இருந்துள்ளார். மேலும், குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியை மீறி வெளியாட்கள் யாரும் உள்ளே வர முடியாது. அதனால், காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.