ஜூலை 20, கிருஷ்ணகிரி (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற சரக்கு லாரி முன்னே சென்ற லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. சரக்கு லாரிக்கு பின் அதனை தொடர்ந்து வந்த கார், லாரி உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 5 பேர் படுகாயமடைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி :
இந்த கோர விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.