MK Stalin / Ma Subramaniyan (Photo Credit : TamilTheHindu / Subramanian_ma X)

ஜூலை 23, கிரீம்வேஸ் சாலை (Chennai News): தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (TN CM MK Stalin) நேற்று முன்தினம் தலைசுற்றல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள கிரீன்வேஸ் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். முதற்கட்டமாக முதல்வருக்கு தலைசுற்றல் தொடர்பான உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இரண்டு நாட்கள் ஓய்வு பெற வேண்டும் என அறிவித்திருந்தனர். MK Stalin Hospitalised: நலமுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. உறுதி செய்த துணை முதல்வர் உதயநிதி.! 

முதல்வர் எப்போது வீடு திரும்புவார்?

இந்நிலையில் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு தொடர்பான காரணங்களை விளக்கி இருந்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "முதலமைச்சரின் சகோதரர் மு.க.முத்து மறைவினால் வருத்தத்தில் இருந்த முதல்வர் ஒருநாள் முழுவதும் உணவு எதையும் உட்கொள்ளாமல் இருந்துள்ளார். பின் காலையில் அவர் நடைபயிற்சி மேற்கொண்ட போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டு உடல் நலக்கோளாறு சரி செய்யப்பட்டது. முதல்வர் எப்போது வீடு திரும்பவார்? என்பது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும். வருத்தம் காரணமாக முதல்வர் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்தது அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்படுத்திவிட்டது. முதல்வர் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்" என தெரிவித்தார்.