Auto Bike Accident in Coimbatore (Photo Credit: YouTube)

ஏப்ரல் 11, மேட்டுப்பாளையம் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், கார்மடையை சேர்ந்த 4 பேர் ஒரே பைக்கில் பயணம் செய்துள்ளனர். அப்போது, சிறுமுகை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் போது, மேட்டுப்பாளையம் அருகே ஆட்டோ மீது மோதி விபத்து (Road Accident) ஏற்பட்டது. இந்த விபத்தில், பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். Husband Kills Wife: தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை.. கணவன் செய்த பயங்கரம்..!

4 பேர் பரிதாப பலி:

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.