ஆகஸ்ட், 16 கோவை (Coimbatore News): நேற்று நாடெங்கும் இந்தியாவின் 77வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டத்தின் ஆலந்துறைப் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் (Independence day celebration) 98 வயதுள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர் பங்கேற்றது அப்பகுதி மக்களை பெருமையடையச் செய்திருக்கிறது.
1925 ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பிறந்த திரு. ஹரிபுத்திரன், தனது 16 வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார். அவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கிய ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்று இரண்டு முறை சிறைக்குச் சென்றிருக்கிறார், என்கிறார் அவரது மருமகள் விஜயலட்சுமி. Tajikistan Earthquake: தஜிகிஸ்தான் நாட்டில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2 புள்ளிகளாக பதிவு.!
பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தனது பொறியியல் (Engineering) படிப்பை முடித்த திரு. ஹரிபுத்திரன் தொலைதொடர்பு துறையில் பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் – ஹெச்.சுபாஷ் சந்திரா மற்றும் (76) ஹெச்.சோமசுந்தரம் (74).
“2021 ஆம் ஆண்டு திரு ஹரிபுத்திரன் பெங்களூருவிலிருந்து கோயம்புத்தூருக்கு வந்தார். கடந்த மார்ச், 2021 வரை சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் (pension) வழங்கப்பட்டது. பின்னர் வங்கியின் தொழில் நுட்பக் கோளாறால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வூதியத் தொகை கிடைக்கவில்லை. மீண்டும் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பிப்பதற்கு எங்களிடம் போதுமான பதிவு ஆவணங்கள் இல்லை.” என்று வருத்தத்தை வெளிப்படுத்துகிறார் மருமகள் விஜயலட்சுமி.