ஆகஸ்ட் 16, தஜிகிஸ்தான் (Tajikistan News): கடந்த சில ஆண்டுகளாகவே உலகளவில் பருவநிலை மாற்றம் என்பது தொடருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, வடக்கு ஆசிய பகுதிகள் உட்பட பல நாடுகளில் வரலாறு காணாத வெள்ளம், கனமழை, வெயில், வறட்சி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சமீபத்தில் கடுமையான வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டு இருந்தது.

அதேபோல, இயற்கை பேரிடர்களில் சக்திவாய்ந்ததாக கருதப்படும் நிலநடுக்கம் தொடர்பான அச்சமும் நிலவி வருகிறது. முந்தைய ஆண்டுகளை போல பெரிய அளவிலான அழிவை தந்த சுனாமி தற்போது வரை ஏற்படவில்லை என்றாலும், அதற்கு சாத்தியக்கூறுகளாக பல இடங்களில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. Rajinikanth On Babaji Cave: நடைபயணமாக பாபா குகைக்கு வந்த ரசிகருக்கு உதவி செய்த ரஜினிகாந்த்; அந்த மனசுதான் சார் கடவுள்.!

துருக்கியின் எல்லைப்பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டிப்போட்டது. சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தபடியாக இந்தியா-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-நேபாள நாடுகளில் அதிபயங்கர நிலநடுக்கம் விரைவில் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஜிகிஸ்தான் (Tajikistan Earthquake) நாட்டில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 02:56 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டில் உள்ள சில்தாரா பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.2 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தால் சேதங்கள் பெரிதளவில் ஏற்படவில்லை.