
பிப்ரவரி 12, புதுடெல்லி (Technology News): நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தும் அல்லது பிஸினஸில் லாபம் கிடைத்தும் நிதியைப் பாராமரிக்கவில்லை என்றால் அந்த பணம் கைகளில் ஒருபோதும் தங்காது. அவசர காலங்களில் கடன் வாங்கும் நிலைமைதான் ஏற்படும். இந்த தவறை பலரும் செய்கின்றனர். நிதி நிர்வாகத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும் இதற்கான சில வழிமுறைகளை வழங்குகிறோம்.
பட்ஜெட் போடமல் இருப்பது:
பட்ஜெட் போட்டு பணத்தை சேமிக்கவும் செலவு செய்யவும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். முதலீடுகள், காப்பீடுகள், வீட்டுச் செலவுகள், பொருட்கள் வாங்க சேமிப்புகள் என அனைத்திற்கும் சேர்த்து பட்ஜெட் போட வேண்டும். கடன்கள் கட்டி வருவதாக இருந்தால் அதற்காக தனியாகவும் சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். இதற்காக தனியாக நோட், அல்லது பட்ஜெட் ஆப்களைப் பயன்படுத்த வேண்டும்.
சேமிப்பின்மை:
சம்பாதிக்கும் பணத்தை சேமிக்காமல் செலவு செய்து கொண்டே இருந்தால் எதிர்காலத்தில் நிதி அபாயம் ஏற்படும். 3 முதல் 6 மாதத்திற்கு தேவையான பணத்தை தனியாக சேர்த்து வைத்திருப்பது நல்லது. வேலையிழப்பின் போதும் அவசர நிதி தேவைக்கும் இது கைக்கொடுக்கும். மேலும் இன்சூரன்ஸ்கள் எடுப்பது எப்போதும் நன்மை பயக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும் போதே எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.மருத்துவ காப்பீடுகள் எடுப்பது பிற்கால மருத்துவ செலவுகளிலிருந்து நிதியைப் பாதுகாக்கிறது. Money: பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உள்ள தொடர்பு.. என்ன தெரியுமா?!
முதலீடு:
முதலீடுகள் செய்யமல் இருப்பது பணத்தின் மீதான அறியாமையின் வெளிப்பாடாக கருதப்படும். சேமிப்பு நாம் சம்பாதிக்கும் பணத்தை பிற்கால தேவைக்காக சேர்த்து வைப்பது போன்று, முதலீடும் செய்து வைக்க வேண்டும். தனித்தனித்தாக தேவைக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும். சேமிப்பதை விட முதலீடு செய்வது பணத்தை இரட்டிப்பாக்கும். முதலீடுகளை சிறுவயதிலேயே தொடங்கவேண்டும். முதலீடுகள் செய்வதற்கு முன் ஆலோசகரின் ஆலோசனை பெறுவது சிறந்தது.
பொறுப்பற்ற கிரெடிட் கார்ட் பயன்பாடு:
மாத சம்பளம் வாங்கும் அனைவருக்கும் மாத முழுவதும் கைக்கொடுப்பது கிரெடிட் கார்டுகள் தான். ஆனால் அளவில்லாமல் இதை பயன்படுத்திவிட்டால் கடனாளியாகத் தான் இருக்க வேண்டும். இஅவைகளை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். இது நாம் வாங்கும் கடான்களில் அதிக வட்டி விகிதங்கள் செலுத்துவதை கடினமாக்கலாம். சரிய பணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். இதனால் வங்கிகள், அவசர தேவையில் லோன்களை வழங்க மறுக்கும்.
கடன் வாங்குதல்:
கடன்கள் வாங்குதல் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். ஆனால் கடன்களை வாங்கிக் கொண்டே இருப்பது நிதி ஒழுக்கமின்மையைக் காட்டுகிறது. தேவைக்களுக்கு ஏற்ப மட்டுமே கடன்கள் வாங்க வேண்டும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். கடன்கள் அடைப்பதற்கு சேமிப்பைப் பின்பற்றி கடன்களை அடைக்க வேண்டும். அதிக வட்டிக்கு கடன்கள் வாங்க கூடாது.